மனநோய் மருத்துவமனை. மூன்றாம் அறையில் ஒரு வாலிபன் "மாலினி... மாலினி'' என்று நடந்து புலம்பிக் கொண்டிருந்தான்.
பார்வையாளர் ஒருவர் டாக்டரிடம் விளக்கம் கேட்டார். ""இவன் மாலினி என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தான். ஆனால் கல்யாணம் பண்ண முடியவில்லை. அதனால் அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல் இப்படி ஆயிட்டான்'' என்றார் டாக்டர்.
எட்டாம் அறையில் இருந்த இளைஞன் ஒருவனும் சுவரில் தலையை மோதிக் கொண்டு "மாலினி... மாலினி' என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தான்.
""ஐயோ... பாவம். இவனும் அந்த மாலினியைக் காதலித்தானா? என்று பார்வையாளர் கேட்டார்.
""இல்லை. இவன் அந்த மாலினியைக் கல்யாணம் செய்து கொண்டவன்'' என்றார் டாக்டர்.
சிரிக்க மட்டும்