Showing posts with label தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். Show all posts

லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது


திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.

இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியி கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.

உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள். மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும் நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா,நகை அடமானமா

மூளையின் சக்தி குறைவுக்கும் காரணங்கள் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் காரணங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?



எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கண்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும் போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவது தான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும் போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்து விட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகி விடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா ?


நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால்
ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும் அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்.


10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும் மருந்து தயாரித்த நிறுவனத்தின் விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்...

நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா? போலியானதா என கண்டுபிடிக்க இணையதளத்தில்

http://verifymymedicine.com/

என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து அதில் Authentication Code என்ற காலத்தில் மருந்து அட்டையில் உள்ள ஒன்பது இலக்க குறியீட்டு எண்ணை டைப் செய்து பின்னர் Authenticate என்பதை கிளிக் செய்தால் நீங்கள் வாங்கிய மருந்தின் வரலாறு உங்களுக்கு வந்துவிடும்.

SMS இல் தகவலறிய;

Authentication Code நம்பரை டைப் செய்து 9901099010 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். பண்ணவும்.

நீங்களும் சோதித்து அறியலாமே!

குறிப்பு: இந்தியாவிற்கு மட்டும்.

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே....!

நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்


நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்கப் பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது.


இந்தச் சனிக்கிரகம் உடலுக்குத் தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனிக்கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...


ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.


இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இந்தியா


* இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கி.மீ

*தலைநகரம் - புதுதில்லி

*தேசிய மொழிகள் - 18

*இந்தியாவின் மிகப்பெரிய ஏரி - ஊலார் ஏரி (காஷ்மீர்)

*இந்தியாவின் மிகநீளமான நடைபாதை - இராமேஸ்வரம் கோவில் நடைபாதை

*இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா - கங்கை டெல்டா

*இந்தியாவின் மிகப்பெரிய நகரம் - கொல்கொத்தா

*இந்தியாவின் மிகப்பெரிய மசூதி - ஜீம்மா மசூதி, டெல்லி

*இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில் - எல்லோரா (மகாராஷ்ட்ரம்)

*இந்தியாவின் மிக உயரமான சிகரம் - நந்தாதேவி

*இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடம் - மௌசின்ரம் (மேகாலயா)

*இந்தியாவின் மிக நீளமான தொங்குபாலம் - ஹெளரா பாலம் (கொல்கொத்தா)

*இந்தியாவிலேயே மிகவும் காடுகள் நிறைந்த மாநிலம் - அஸ்ஸாம்

*இந்தியாவிலேயே மக்கட்தொகை அதிகமான மாநிலம் - உத்திரபிரதேசம்

*இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலம் - இராஜஸ்தான்

மனித உடல் !!!!!!!!!!!!!!!!!!!!!! செய்திகள்.


> நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

> மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத் தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-


> மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.

> மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

> மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடு கின்றது.

> மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.

> மனித மூளையின் எடை 1.4 கிலோ. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4.

> மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர்.

> உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

> மனித உடலில் உள்ள குரோமோசோம் களின் எண்ணிக்கை 23 இணை

> ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

> மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

> நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

> மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.

> ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர்.

> மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

> நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

> நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

> நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

> நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 விநாடிகள் ஆகின்றன.

> நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நன்றி : உண்மை இதழ்

பழந்தமிழரின் முகத்தல், நிறுத்தல் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பழந்தமிழரின் கால அளவு முறைகள்


இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.