Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

இயந்திர உலகில் ............. ஓடிக்கொண்டிருப்பது .. கடிகாரமில்லை ...நீதான்!




இயந்திர உலகில் .............
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!-நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்
சிறியமுள் -உன் உயர்வு
வினாடி முள் -உன் முயற்சி
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது உன் முன்னோர் சொன்னது ..!

முழுமை பெற்ற காதல் முதுமை காதல்தான்



முடி நரைத்து விட்டது.

தோல் சுருங்கி விட்டது.

பார்வை குறைந்து விட்டது.

நடை தளர்ந்து விட்டது.

எது வேண்டுமானாலும் மாறலாம்

உன் மீதுள்ள காதலை தவிர....

கவர்ச்சியில் வரும் காதல் எல்லாம்

காலப்போக்கில் ஓடி விடும்.

முழுமை பெற்ற காதல்தான் முதுமை 

வரை ஓடிவரும்....

அன்பு மகனுக்கு.. அப்பா எழுதுவது..!!


வசதியாக தான் இருக்கிறது மகனே..
நீ கொண்டு வந்து சேர்த்த.. முதியோர் இல்லம்..!!


பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு சலனமின்றி.. நீ வெளியேறிய போது..
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு.. விட்டு செல்லும் போது.. என் முதுகுக்கு பின்னால் நீ கதறக்.. கதற அழும்போது
என் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது..!!

தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் கூட..
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி.. எதுவென்று ஓடி அலைந்ததை..
ஒப்பீடு செய்கிறேன்..!!

இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க.. நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான.. மாதத் தொகையை மறக்காமல்.. அனுப்பி வைப்பதற்காக..
மனம் மகிழ்ச்சி அடைகிறது..!!

நீ விடுதியில் தங்கி படித்த காலத்தில்.. உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்..
உன் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததின் எதிர் வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்..!!

இளம் வயதில்.. நீ சிறுகச்.. சிறுக சேமித்த அனுபவத்தை..
என் முதுமை பருவத்தில்.. மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்...

ஆயினும் உனக்கும்.. எனக்கும் ஒரு சிறு வேறுபாடு...

நான் கற்றுக் கொடுத்தேன்.. உனக்கு வாழ்க்கை இதுவென்று..

நீ கற்றுக் கொடுக்கிறாய்.. எனக்கு உறவுகள் இதுவென்று..!!

உன் ஒரு பார்வை போதும் அன்பே


உன் ஒரு பார்வை போதும் அன்பே

உன் நினைவோடு நான் வாழ்ந்திட....
உன் ஒரு வார்த்தை போதும் அன்பே
நான் உயிரோடு வாழ்ந்திட....
உனக்காக எதையும் இழக்கலாம்

என் உயிரைக்கூட....

காதல்

முடி நரைத்து விட்டது. 
தோல் சுருங்கி விட்டது. 
பார்வை குறைந்து விட்டது. 
நடை தளர்ந்து விட்டது. 
எது வேண்டுமானாலும் மாறலாம்
உன் மீதுள்ள காதலை தவிர.... 
கவர்ச்சியில் வரும் காதல் எல்லாம்
காலப்போக்கில் ஓடி விடும். 
முழுமை பெற்ற காதல்தான் முழுமை
வரை ஓடிவரும்....

கவியரசு கண்ணதாசன் வரிகள்

தாய் பசித்திருக்கும்போது
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.


உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை
எடுப்பவன்பெயர் ஓவியன்.
'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்;
அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.

அவளை நினைத்து ஒரு கவிதை !

அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"

நண்பன்


ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

மறக்க முடியாமல் பயணிக்கவைப்பது தற்சமய மறத்தல் நிகழ்வுதான்...

நீ என்னை இழுத்த
இழுப்புக்கெல்லாம்
என் காதலுடன்
சுற்றி வருகிறது
உன் இதயமும் சேர்ந்து.....


மனம் சிக்கிய உன்
புன் முறுவல்உடன்
தோய்கிறது
உனக்குள் சிறைப்பட
எத்தனிக்கும் என்னிதயம்...

கொச்சைப்படுத்தும்
உன் நாணத்தின்
நாட்காட்டியில்
இறுதித் திகதி
இன்னும்
கிழிபடாமலிருக்கிற
தென்பது உனக்கும்
தெரியும்...........


உன்னை இப்போது
மறக்க வேண்டுமானால்
மறந்து போகிறேன்
அதில் எனக்கொன்றும்
சிரமமில்லை........


ஆனால் உன்னை
எப்போதும் மறக்க
முடியாமல் பயணிக்கவைப்பது
தற்சமய மறத்தல்
நிகழ்வுதான்...


மௌனஞானி பார்த்திபன்

என் எண்ணத்தை சொல்ல ஆசைபட்டேன்

என் எண்ணத்தை
சொல்ல
ஆசைபட்டேன்
கேட்க ஆள் இல்லை
என்று
அரைமனதாய்
அமா்ந்த
நேரம்
இதமாய் வீசிய
தென்றலிடம்
கதை ஒன்று
சொல்லட்டுமா
என்றேன்
கனிவோடு காதுகொடுத்தது

-Raj Amalajones

நண்பன்


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது.

அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து “எப்பிடி டா இருக்கே?” என்று வழக்கம் போல கேட்டான்.

“சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .

அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
“நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து
கொண்டேன் டா” என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..

கவியரசு கண்ணதாசன் பற்றி தொகுப்பு

கவியரசு கண்ணதாசன் பற்றி இணையதளத்தில் படித்துக் கொண்டிருக்கையில் இந்த தொகுப்பு கிடைத்தது. இராம. கண்ணப்பன் என்பவர் முத்தையா (கண்ணதாசனின் இயற்பெயர் ) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் படித்துவிடும் விதத்தில் அழகாக தொகுத்துள்ளார்.

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

ஒரு தாயின் பதட்டம் ... ?


என் பெண் குழந்தை
தவழும்போது கீழே விழுந்தாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
நடக்கும் போது கீழே விழுந்தாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
பள்ளித்தேர்வில் பல முறை பெயிலானாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
இப்போது கல்லூரிக்குச்செல்கிறாள்
காதலில் விழுவாளோ என பதட்டப்படுகிறேன்
விழுந்தாலும் எழுவாளோ என பதட்டப்படுகிறேன்
விழுந்து எழுந்தாலும் வாழ்க்கையில்
பெயிலாகி விடுவாளோ என பதட்டப்படுகிறேன்

ஏனென்றால் அவள் என் மகள்

ந.கல்யாண சுந்தரம் , ஓசூர்.