Showing posts with label இயற்கை மருந்து. Show all posts
Showing posts with label இயற்கை மருந்து. Show all posts

செவ்வாழை மருத்துவ குணங்கள்.........!


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய். . .

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
 
பித்தத்தைப் போக்கும், உடலுக்குத் தென்பூட்டும், இதயத்திற்கு நல்லது, மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும், கல்லீரலுக்கும் ஏற்றது, கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும், சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும், கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும், முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்,இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும், மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது,
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

திப்பிலி மருத்துவ பயன்கள்




திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும்.
திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்துஎடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடித்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

உடலுக்கு பலன் தரும் பாகற்காய்



பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காயும்   இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.


இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!

எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.

இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.

வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

புற்றுநோயை தடுக்கலாம்


இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.


இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். சோற்று கற்றாழை 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம். விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாகமட்டும் எடுத்து கொள்ளவேண்டும்).

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.

மருந்தை உட்கொள்ளும் விதம்:

இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

source-dinakaran

சளித்தொல்லை நீங்க - இயற்கை மருந்து


எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)



அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து

முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்.

காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்.
மருக்கள் மீது பூச அவை உதிரும்.
20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்..

மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்


தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.


காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.