Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது ....

செல்வன் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான் ....  வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான் ....

ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள். வந்தவள் செல்வனும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள் ....

அம்மா கேட்டாள் "யாரு இது? செல்வன் சொன்னான் "என் ரூம்மேட்மா " அம்மா "அப்படீன்னா? செல்வன் "ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம் .... அவ தனி பெட்ரூம் நான் தனி பெட்ரூம் " அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள் , இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் "உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை, ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?

 செல்வன் சொன்னான் "தெரியலை ,எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் ", செல்வன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான் அன்புள்ள அம்மா நான் நீங்கள் இங்கே இருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை எடுக்கலைன்னும் சொல்லலை, ஆனா ஒண்ணு மட்டும் உண்மை, என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது ....
அதை செல்வன் பிரித்து படித்தான் ....

அன்புள்ள மகனுக்கு நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு படுக்கிறேன்னு சொல்லலை படுக்கலைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு பிடிச்சு இருப்பா .... 

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்!!!!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக்கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக்கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப்போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது.  ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தீர்கள்.

எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து,அவரை விடுதலை செய்ய வேண்டும்”என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒரு தடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப்பார்க்கவில்லை.”

அரண்மனையில் ஒரு போட்டி!


விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை. திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி.

உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான். அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து, "உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!  ஆயிரம் வராகன் பொன்னா?" "இல்லை..." "பின்னே... 10 கிராமங்களா?" "ப்ச்! வேண்டாம்..." ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?" "தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."


"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!!!!!!!!!!! 

பரஸ்பரம் மரியாதை நன்மை பயக்கும்


சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.


"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...

உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.....

நான் நாட்டு கட்டையா இல்லை நான் ஒரு ஊமை



ஒரு பொண்ணு பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தது. அதே பஸ் ஸ்டாப்பில் 2 இளைஞர்களும் நின்றார்கள்.இந்த இரண்டு பேரும் அந்த பெண்ணைவிட்டு கொஞ்சம் தள்ளியே நின்றார்கள்.சிறிது நேரம் கழித்து அந்த பஸ் ஸ்டாப்புக்கு வேறொரு பையன் வந்தான்.அவன் அந்த பெண்ணின் அருகே நின்றான்.இவள் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் காதில் "செம கட்டை....நாட்டு கட்டை" என்று சப்தம் கேட்டது.இதை கேட்ட அந்த பெண் கோபத்தில் தன் அருகே நின்ற பையனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்துவிட்டு ''நான் உனக்கு நாட்டு கட்டையா என்று கேட்டாள்''.
பிறகு அவனை அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டினாள்.எதுவுமே சொல்லாத அந்த பையன்,சிறு புண்ணகையுடன் ஒரு பேப்பரில் எதையோ எழுதி,அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அதை கோபத்துடன் வாங்கி படித்தாள் அந்த பெண்.அதை படித்த பின் ஒரு சில நிமிடத்தில் அழுதுவிட்டாள்.

அந்த பேப்பரில்,,,
"அன்பு தங்கையே,உனது அண்ணனாகிய எனக்கு,பிறவியிலிருந்தே பேச்சு வராது.
நான் ஒரு ஊமை மா"
என்று எழுதியிருந்தது......
‪நீதி‬
வேற ஒருவன் செய்த தவறுக்கு, தங்கை என்று நினைத்த வாய் பேசாத பையனுக்கு அடியா????

முட்டாள்களாக வேடம் அணிகிறோம் வெற்றிபெற..!!!!!!!!!!!!!!!

"நீதிக்கதை"

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.


ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!