Showing posts with label இந்த கற்பனை சிரிப்பதற்கு மட்டும். Show all posts
Showing posts with label இந்த கற்பனை சிரிப்பதற்கு மட்டும். Show all posts

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!


அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். 

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. 

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. 

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லை
யே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. 

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

சம்பளம் வந்துடுச்சி.மோதிரமும் வாங்கியாச்சி..

மனைவிக்கு ஆசையா ஒரு மோதிரமும் வாங்கியாச்சி..

போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்,

"நேத்திக்கு நான் மோதிரம் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டப்ப முடியாதுன்னீங்க ... இப்போ எப்படி வாங்குறதுக்கு உங்களுக்கு மனசு வந்துச்சி"

"இப்பதான அவர் சொன்னாரு?"

"அவரா யாரு?"

"என்னோட பிரண்டு ஒருத்தர் ஜோசியர் ... காலையிலே தான் சொன்னார் ... 'மனைவி கேக்குற வாங்கிக்கொடுக்கலைன்னா அடுத்த ஜென்மத்துலயும் அவங்களேதான் மனைவியா வருவாங்க'ன்னு"

# அப்பாடா... இன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்!

அவள் மாலை வீடு திரும்பும் போது கிளி கூப்பிட்டது

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.


இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.  அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான்.

இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ?

எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.

இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?

எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன . 


வழிப்போக்கன் பிச்சைக்காரன் நகைச்சுவை கலாட்டா

வழிப்போக்கன் : ஏம்ப்பா இப்படி பிச்சை எடுக்குறதுக்கு எதாவது வேல செஞ்சு                                              பொழைக்கலமில்ல?

பிச்சைக்காரன் : நீ எங்கைய்யா வேல செய்ற? 

வழிப்போக்கன் : வங்கில வேல செய்ற .. 

பிச்சைக்காரன் : சரி உங்க வங்கி தொடங்கி எத்தன வருஷம் ஆகுது? 

வழிப்போக்கன் : ஒரு 200 வருஷம் இருக்கு ? ஏன் எங்க வங்கில account open பண்ண                                      போறியா ? 

பிச்சைக்காரன் : அவ்வளு காசு இருந்தா எதுக்குய்யா நான் பிச்சைஎடுக்க                                                        போறே... 

வழிப்போக்கன் : பின்ன எதுக்கு கேட்ட?... 

பிச்சைக்காரன் : ஒன்னோட வேலைய விட்டுட்டு வேர வேலைக்கு போறியா ? 

வழிப்போக்கன் : நான் எதுக்கிய்யா வேற வேலைக்கு போகணும் .. 

பிச்சைக்காரன் : உங்க வங்கி தொடங்கி 200 வருஷந்தா ஆகுது அதுல வேல                                                  செய்ற நீ வேற வேலைக்கு போன்னா போகமாட்ட 2000                                                            வருஷத்துக்கு முன்னாடி இருந்த எங்க தொழில நான்                                                              எதுக்கிய்யா விடனும் ? 

வழிப்போக்கன் : 2000 வருஷத்துக்கு முன்னாடியே பிச்சைக்காரங்க                                                                    இருந்தாங்கன்னு உனக்கு யாருய்யா சொன்னங்க.. 

பிச்சைக்காரன் : யாருய்யா சொல்லணும் அது தான் திருவள்ளுவரே எங்கலபத்தி                                      பாடி வெச்சிருக்காரே ? அவர் கிட்ட எங்க ஆளுங்க பிச்சை                                                   கேக்காம இருந்திருந்தா அவருக்கு எப்புடிய்யா தெரிஞ்சிருக்கும்? 
வழிப்போக்கன் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாலினி... மாலினி



மனநோய் மருத்துவமனை. மூன்றாம் அறையில் ஒரு வாலிபன் "மாலினி... மாலினி'' என்று நடந்து புலம்பிக் கொண்டிருந்தான்.

பார்வையாளர் ஒருவர் டாக்டரிடம் விளக்கம் கேட்டார். ""இவன் மாலினி என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தான். ஆனால் கல்யாணம் பண்ண முடியவில்லை. அதனால் அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல் இப்படி ஆயிட்டான்'' என்றார் டாக்டர்.


எட்டாம் அறையில் இருந்த இளைஞன் ஒருவனும் சுவரில் தலையை மோதிக் கொண்டு "மாலினி... மாலினி' என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தான்.

""ஐயோ... பாவம். இவனும் அந்த மாலினியைக் காதலித்தானா? என்று பார்வையாளர் கேட்டார்.

""இல்லை. இவன் அந்த மாலினியைக் கல்யாணம் செய்து கொண்டவன்'' என்றார் டாக்டர்.

சிரிக்க மட்டும்

அவளை நினைத்து ஒரு கவிதை !

அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்!!!!!!!!!!!



1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்
2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .
3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்...
4. மேக்கப் போடாமல் வீட்டிற்க்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்
7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்
8.இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
9. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்

10. செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்

11. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நகைச்சுவை



இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.


அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,


ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.


அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.


இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.


சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.


முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.


கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?


'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.


பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.


நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.


அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.


அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'


இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்.

பணம் இல்லேன்னா என்ன வாங்க முடியும்

பணம் இல்லேன்னா ஏதும் வாங்க
முடியாதுன்னு சொல்லுறாங்க
ஆனா ஒன்னு வாங்கலாம் ........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'' கடன்''.....!!! .எப்புடி !!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த கற்பனை சிரிப்பதற்கு மட்டும் !!!!!

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க
சொன்னா மாதிரியே..
இன்னைக்கி நாங்க
அஞ்சு பேரும்
சேர்ந்து ஒரு பாட்டியை,
ரோட்டுக்கு இந்த பக்கத்துல
இருந்து அந்தப்
பக்கமா கொண்டு வந்து விட்டோம்
டீச்சர்...!
டீச்சர் : வெரிகுட்...!! நல்ல
காரியம்! வயசானவுங்க
சாலையை கடக்க
இப்படித்தான்
உதவி செய்யணும்!!.................
அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!
மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க
வரவே மாட்டேன்னு அடம்
பிடிச்சாங்க...! நாங்க
அஞ்சு பேரும்தான்
சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!    

உனக்கு பிடித்த விலங்கு எது?



டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?

ஹரி: பூனை டீச்சர்

டீச்சர்: ஏன்?

ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!

மெக்கானிக்கும் மருத்துவரும்



ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து

மெக்கானிக் கார் எஞ்சினைக் காண்பித்து நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம்.

அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.
இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல்கார்இயங்கிக் கொண்டிருக்கும்போது அது முடியுமா என்றார்.

ஐந்தாறு peg ஆன பிறகு ....



விமானம் பறந்து கொண்டிருந்தது...... மதுபான சேவை தொடர்ந்தது


ஐந்தாறு peg ஆன பிறகு ....

ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்

அமெரிக்கன் - நான் லப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்

ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்
சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்


நம்மாளு - ங்கொய்யால , நவுர்ற நான் ஓட்றன் பிளேன

திடீர் பூகம்பம்



திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே

விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம்

நடந்ததை விளக்குகிறார்.


மனைவி – என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க..

நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.


கணவன் – நல்லா யோசிச்சுப் பாரு… பூகம்பம் வந்த பிறகு

நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

சலவைக்கு நான் எப்பவும் நம்புவது 'சூர்யாவைத்தான்!



எப்பவும் 'பளிச்'சென காணப்படுகிறதே உன் டிரஸ்

அதோட ரகசியம் என்ன?


அதுவா, சலவைக்கு நான் எப்பவும் நம்புவது

'சூர்யாவைத்தான்!


அது என்ன சோப்பா?


இல்லை...என் கணவர்!

மன்னா!



எதிரி மன்னன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து

விட்டதாக தகவல் வந்துள்ளது, மன்னா!





உடனே, மகாராணியே மேக்கப் பை கலைக்கச்

சொல்லுங்கள்...இதோடு தொலைந்தான் எதிரி...!

கணவன் மனைவி நகைச்சுவை



மனைவி;- 'என்னங்க.. கிச்சன்லேர்ந்து..அந்த உப்பு டப்பாவை...எடுத்துகிட்டு வாங்க...!'

கணவன்;- 'எங்க..வச்சிருக்க.. காணோமே...?'

மனைவி;- 'உங்களால..என்ன செய்ய முடியும்...!
உங்க அம்மா உங்கள..எப்படித்தான் வளர்த்தாங்களோ..! 
உருப்படியா..
ஒரு வேலை செய்ய..முடியுதா...?
உங்கள கட்டி வச்சு...எங்க வீட்டுக்காரங்க...
என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க...!
நீங்கல்லாம்..ஆபீஸில..பத்து பேரை எப்படி.. 
தான் கட்டி..மேய்கிறிங்க...?
இதுல மேனேஜர்'னு ஒரு பட்டம்..வேற..!!'

கணவன்;- 'இல்ல..நெஜமாவே காணாம்..!'
மனைவி;- 'உங்கள..நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க.. முடியுமா..? 
உங்களால ஒரு வேலையும்.. உருப்படியா செய்ய முடியாது'னு தெரிஞ்சு..தான் 
உப்பு டப்பா'வ நான் ஏற்கனவே... 
இங்க கொண்டு வந்துட்டேன்...!!

நகைச்சுவை


மனைவி : ஏங்க அதான் அந்த நர்ஸ் சொன்னாங்கன்னு சொன்னிங்கல்ல இது ஒருசின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு
அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க
,
,
,
..
..
,
கணவன் :

அடி அசடு நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி டாக்டர்கிட்ட