Showing posts with label சிந்தனை துளிகள். Show all posts
Showing posts with label சிந்தனை துளிகள். Show all posts

கவியரசு கண்ணதாசன் வரிகள்

தாய் பசித்திருக்கும்போது
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.


உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை
எடுப்பவன்பெயர் ஓவியன்.
'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்;
அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.

வாழ்க்கை தத்துவம்


குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில்,“அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.


வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை. “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான்

இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை

படித்ததில் பிடித்தது 

தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,,


கோவிலில் இருந்தோம்,
திருவிழா என்று நம்மை விரட்டி விட்டனர்.!!!


நாகூரில் இருந்தோம்,
அங்கேயும் வெள்ளை அடிப்பதாக சொல்லி விரட்டி விட்டனர்.!!!

வேளாங்கண்ணியிலும்
திருவிழா பெயரை சொல்லி துரத்தி விட்டனர்.!!!

ஆனால் ஒரு சந்தேகம் அம்மா...

நாகூருக்கு வருபவர்களை முஸ்லிம்கள் என்றும்,
கோவிலுக்கு வருபவர்களை ஹிந்துக்கள் என்றும், வேளாங்கண்ணிக்கு வருபவர்களை கிறஸ்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் நாம் எங்கு சென்றாலும் நம்மை
மட்டும் ஏனம்மா
''புறா'' என்றே அழைக்கின்றனர் ???

தாய் புறா:
அதனால் தான் அவர்கள் கீழேயே வசிக்கிறார்கள்,
நாம் மேலேயே வசிக்கிறோம்......!!!

நண்பன்


ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

சிந்தனை துளிகள்.....

  •   உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது
  •  உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். 
  •  நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுபோகிறது. 
  • ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்! 
  • பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும், பகிர்ந்து கொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான். 
  • வாழ்க்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா? “எடுப்பவர்கள் இழக்கிறார்கள். கொடுப்பவர்களே பெறுகிறார்கள்”. 
  •   வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால், உங்களிடம் தாவிக்கொண்டு வருகிறது. 
  • ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் நீங்கள் தேட வேண்டியது, வாய்ப்பைத் தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!! 
  •   நீங்கள் ஒன்றைத் தொடங்காதவரை, சென்றடைவது எப்படி? 
  •  நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம்… நிகழ்காலம்தான்!!

உறவுகள்

விலகி சென்றுவிடுவார்களோ

என இறுக பற்றிக்கொள்ளும்

உறவுகள் தான்

இறுக்கத்தின் வலி

தாங்காமல் பிரிந்துசெல்ல

துடிக்கின்றன...