Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?.............

ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''

ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.

அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.

எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''

"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?

ஒரு முக்கியமான டவுட்டு அங்கிள்..............................

ரெண்டு நாள் முன்னாடி ஏழாம் வகுப்பு படிக்கிற தெரிஞ்ச பையன் ஒருத்தன் அவனோட maths book எடுத்துகிட்டு வந்தான்.

ஆஹா நாம maths ல கில்லினு தெரிஞ்சு வந்துருக்கான் போலனு நினைச்சுகிட்டு அவன்கிட்ட.....

"வாடா வா......ஏதாவது டவுட்டா?"

"ஒரு முக்கியமான டவுட்டு அங்கிள்.....இந்த புக்ல ஏதாவது வாசம் வருதானு சொல்லுங்க......"

நானும் மோந்து பார்த்துட்டு,

"இல்லையேடா ஒரு வாசமும் வரல....."

"போங்க அங்கிள்......உங்களுக்கு படிப்பு வாசனையே இல்ல.... எப்படித்தான் உங்களை எல்லாம் வேலைக்கு எடுத்தாங்களோ......"

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........."

டேய் நல்லா வருவடா நீ நல்லாவருவ......

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.


இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.  அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான்.

இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன ?

எமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.

இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??

எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன?

எமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன . 


அண்ணே எனக்கு ஒரு டவுட்டு....?

அண்ணே எனக்கு ஒரு டவுட்டு....?

என்னடா..? நொண்ணே

ஐந்து பெண் பெற்றால்... அரசனும்

ஆண்டி ஆவான்'னு... ஒரு பழமொழி

இருக்கு அண்ணே ..?

அதுல.. என்னடா டவுட்.. உனக்கு..?

அண்ணே..ஐந்து பெண் பெற்றால்.... அரசி தானே Aunty ஆவாங்க...? அதெப்படி

அரசன் ஆண்டி.. ஆவான்.??

அவளை நினைத்து ஒரு கவிதை !

அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நகைச்சுவை



இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.


அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,


ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.


அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.


இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.


சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.


முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.


கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?


'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.


பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.


நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.


அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.


அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'


இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்.

பணம் இல்லேன்னா என்ன வாங்க முடியும்

பணம் இல்லேன்னா ஏதும் வாங்க
முடியாதுன்னு சொல்லுறாங்க
ஆனா ஒன்னு வாங்கலாம் ........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'' கடன்''.....!!! .எப்புடி !!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த கற்பனை சிரிப்பதற்கு மட்டும் !!!!!

மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க
சொன்னா மாதிரியே..
இன்னைக்கி நாங்க
அஞ்சு பேரும்
சேர்ந்து ஒரு பாட்டியை,
ரோட்டுக்கு இந்த பக்கத்துல
இருந்து அந்தப்
பக்கமா கொண்டு வந்து விட்டோம்
டீச்சர்...!
டீச்சர் : வெரிகுட்...!! நல்ல
காரியம்! வயசானவுங்க
சாலையை கடக்க
இப்படித்தான்
உதவி செய்யணும்!!.................
அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!
மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க
வரவே மாட்டேன்னு அடம்
பிடிச்சாங்க...! நாங்க
அஞ்சு பேரும்தான்
சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!    

உனக்கு பிடித்த விலங்கு எது?



டீச்சர்: உனக்கு பிடித்த விலங்கு எது?

ஹரி: பூனை டீச்சர்

டீச்சர்: ஏன்?

ஹரி:பூனை குறுக்க வந்தா பாட்டி என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. அதான்!

சொத்து குறைந்து போச்சு!!!!!!!!!!



சத்து குறைந்து போச்சுன்னு டாக்டர் கிட்ட போனீங்களே,

என்ன ஆச்சு?''

'இப்போ என் சொத்து குறைந்து போச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு



103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?”

“104″

“அதான் இல்லை.. நடுவுல ‘0′தான் இருக்கு.

மெக்கானிக்கும் மருத்துவரும்



ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து

மெக்கானிக் கார் எஞ்சினைக் காண்பித்து நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம்.

அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.
இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல்கார்இயங்கிக் கொண்டிருக்கும்போது அது முடியுமா என்றார்.

மன்னா!



எதிரி மன்னன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து

விட்டதாக தகவல் வந்துள்ளது, மன்னா!





உடனே, மகாராணியே மேக்கப் பை கலைக்கச்

சொல்லுங்கள்...இதோடு தொலைந்தான் எதிரி...!

கணவன் மனைவி நகைச்சுவை



மனைவி;- 'என்னங்க.. கிச்சன்லேர்ந்து..அந்த உப்பு டப்பாவை...எடுத்துகிட்டு வாங்க...!'

கணவன்;- 'எங்க..வச்சிருக்க.. காணோமே...?'

மனைவி;- 'உங்களால..என்ன செய்ய முடியும்...!
உங்க அம்மா உங்கள..எப்படித்தான் வளர்த்தாங்களோ..! 
உருப்படியா..
ஒரு வேலை செய்ய..முடியுதா...?
உங்கள கட்டி வச்சு...எங்க வீட்டுக்காரங்க...
என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க...!
நீங்கல்லாம்..ஆபீஸில..பத்து பேரை எப்படி.. 
தான் கட்டி..மேய்கிறிங்க...?
இதுல மேனேஜர்'னு ஒரு பட்டம்..வேற..!!'

கணவன்;- 'இல்ல..நெஜமாவே காணாம்..!'
மனைவி;- 'உங்கள..நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க.. முடியுமா..? 
உங்களால ஒரு வேலையும்.. உருப்படியா செய்ய முடியாது'னு தெரிஞ்சு..தான் 
உப்பு டப்பா'வ நான் ஏற்கனவே... 
இங்க கொண்டு வந்துட்டேன்...!!

நகைச்சுவை


மனைவி : ஏங்க அதான் அந்த நர்ஸ் சொன்னாங்கன்னு சொன்னிங்கல்ல இது ஒருசின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு
அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க
,
,
,
..
..
,
கணவன் :

அடி அசடு நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி டாக்டர்கிட்ட