Showing posts with label தமிழன்டா. Show all posts
Showing posts with label தமிழன்டா. Show all posts

போட்டியில் ஜப்பான் காரனும், தமிழனும் கலந்துகொண்டார்கள்....!!!!!!!!!!!


ஒரு லிட்டர் பெட்ரோலில் எவ்ளோ தூரம் போகிறோம்,என்பதுதான் போட்டி...

ஒரே கம்பெனியின் தயாரிப்பான இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர் போட்டியை துவங்கினார்,


1லிட்டரில் 40 கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல் தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த தமிழன்,அதே 1 லிட்டரில் 40 கி.மீ வண்டி நின்றது.

அப்பொழுதுதான் தனக்கு தெரிந்த வித்தையை காட்டினான்,
பெட்ரோல் டேங் மூடியை திறந்து வாயால் ஊதிவிட்டு....... ஸ்டார்ட் செய்தான்.
2 கிமீ ஓடியது.

வண்டியை.தரையில் வழப்பக்கமா சரிச்சி போட்டு...... மீண்டும்,ஸ்டார்ட் செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம் சரிச்சு போட்டு.....2 கிலோமீட்டர் ஓட்டினான்.

ஆகமொத்தம் போட்டில நம்ம ஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன் சொன்னான்,

பைக்க கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான், ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுகொள்ள வேண்டும்.

தமிழன்டா .......!