Showing posts with label சுற்றுலா தலங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலா தலங்கள். Show all posts

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ?

சுருளிமலை அதிசயம்!

உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

ரகுநாத் கோவில்

ஜம்முவின் முற்கால மன்னர்கள் மகாராஜா ரன்பீர் சிங் மற்றும் அவரது தந்தை மகாராஜா குலாப் சிங் ஆகியோரால் கட்டப்பட்ட ரகுநாத் கோவில்ரகுநாத் மந்திர் நகரில் அமைந்துள்ளது . ஏழு வரலாற்று சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் ரகுநாத் கோவில் அமைந்துள்ள இடத்தில் உள்ளன. இந்த கோவிலின் பிரதம தெய்வங்கள் இந்து மத கடவுள்களின் பல்வேறு உருவகங்களான சூரிய கடவுளான சூர்யா, இந்து மத அழித்தல் கடவுள் சிவன், இந்து மத பாதுகாப்பு கடவுள் விஷ்ணு ஆகியன. இந்து குரங்கு கடவுளான அனுமானின் சிலை மற்றும் ரன்பீர் மகாராஜாவின் உருவ படங்களும் கோவில் நுழைவு பகுதியில் காணப்படுகின்றன. ரகுநாத் கோவிலில் பல்வேரு இந்து கடவுள்களின் சிலைகளும் , பெண் கடவுள்களின் பல பெரிய சிலைகளுக்குமான கருவறை காணப்படுகிறது. மேலும் சிவனின் அடையாளமான ‘லிங்கங்கள்’ இங்கு காணப்படுகின்றன.

     

குல்மார்க் GULMARG

குல்மார்க் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோடைவாசஸ்தலம்