Showing posts with label கீரை. Show all posts
Showing posts with label கீரை. Show all posts

மணத்தக்காளி கீரை..!



மணத்தக்காளி கீரைக்கு.. மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்