Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 25ஆக உயர்த்த - சச்சின் டெண்டுல்கர்

சிட்னி,மார்ச்.025 (டி.என்.எஸ்) அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 25ஆக உயர்த்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் தூதுவராக உள்ள சச்சின் டெண்டுல்க, சிட்னியில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து கூறியிருப்பதாவது:

அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 10 ஆக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரனாக, முடிந்த அளவுக்கு கிரிக்கெட்டை உலக மயமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை அணிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பது பிற்போக்கான நடவடிக்கையாகும். ஐ.சி.சி.யில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளை (சிறிய அணிகள்) மேம்படுத்தும் வழிமுறைகளை நாம் காண வேண்டும்.

சிறிய அணிகள் ஒவ்வொரு உலக கோப்பையிலும் எப்போதும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. திறமையை வெளிப்படுத்த நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தால், அவர்களால் தொடர்ந்து இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற முன்னணி அணிகளுடன் மோத அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த நிலையில் அணிகள் குறைப்பு விவகாரம் அவர்களுக்கு எதிரான நியாயமற்ற செயல் ஆகும். ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இந்த நாட்டிற்கு சென்று ஏன் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடக்கூடாது? உலக கோப்பையில் 14 அணிகள் என்பதே போதாது. அடுத்த உலக கோப்பையில் 25 அணிகளை விளையாட வைக்க வேண்டும். கிரிக்கெட் 6 அல்லது 7 அணிகளுக்கு மட்டும் உரியது அல்ல. கிரிக்கெட்டை உலகம் முழுவதும் விரிவுப்படுத்தி பிரபலமடையச் செய்தால், மேலும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!



பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற     95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639

போலீஸ் SMS :- —————————————-      9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100


வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155

பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

போலீஸ் : —————————————–——        100

தீயணைப்புத்துறை:————————-—–           101

ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

போக்குவரத்து விதிமீறல———————–         103

விபத்து :———————————————-–           100, 103

பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093


ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Relaxplzz

வந்தாச்சு பறக்கும் கார்!




பறக்கும் கார்கள் வரிசையில், ஏரோமொபைல் 3.0 இப்போது புதிதாக அறிமுகமாக இருக்கிறது. ஆட்டோமொபைல், விமானம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இது உருவாக்கப் ஒரு நொடியில் காரிலிருந்து விமானமா மாறும்படி இது வடிவம சாதாரண காரை நிறுத்துவதற்கு இடம் தேவைப்படுமோ, அதே அளவு இடமே இந்த பறக்கும் காருக்குப் போதுமானது. 

எல்லா கார்களைப் போலவே இதையும் டிராஃபிக்கில் ஓட்டிச் செல்லாம். எந்த விமானதளத்திலும் இதை விமானமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேமாதிரி தரையிறங்க நூறு மீட்டர்கள் நீளம் கொண்ட ஒரு புல்பாதையோ நட ஏரோமொபைல் 3.0யின் மாதிரி வெர்ஷனான இது, இதற்கு முந்தைய மாதிரியான ஏரோ மொபைல் 2.5யை விட மேம்பட்டிருக்கிறது. 

இதில் இருவர் பயணிக்கலாம். ஏரோமொபைல் 3.0-ல் இன்னும் பல நவீனத் தொழில்நுட்பங்களையு இணைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்குப் பல கோண இறக்கைகள் என்ற வசதி இதில் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. இந்த வசதி இருப்பதால் கரடுமுரடான நிலப்பரப்பிலும் ஏரோமொபைலைத் தரையிறக்கலாம். 

அக்டோபர் மாதத்தில் இருந்து இதன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் இணைக்கப்பட்டிருக்கும் ஏவியானிக்ஸ் கருவி, ஆட்டோ பைலட், பாராசூட் அமைப்பு ஆகியவை  சிறப்புகளாகக் கூறப்படுகிறது. 

தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்......!

"அறிவியலற்ற மொழி தமிழ்.அதை கற்று என்ன லாபம்....?" என்று இன எதிரிகள் பரப்பியதை நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்....

எடுத்துக்காட்டாக பல் துலக்கும் வேப்பங்குச்சி, "ஆலம் விழுது" ஆகியவை பத்தாம்பசலித்தனமானவை என்ற கருத்து நிலைநாட்டப்பட்டு "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்ற பழமொழி மூடநம்பிக்கை வரிசையில் வைக்கப்பட்டு.அறிவு என்ற வலயத்திற்கு வெளியே வைக்கப்பட்டது.

ஆனால் அதுவே "நீம் டூத் பேஸ்ட்", "ஹெர்பல் டூத் பேஸ்ட்" என்று பெரிய பன்னாட்டு பெருமுதலாளி நிறுவனங்களின் [பற்பசையாக வருகிற போது கேள்விமுறையின்றி ஏற்கப்படுகிறது.

"பூண்டு ரசம்", "பூண்டு துவையல்" என்ற தமிழர்களின் உணவுமுறை ஒதுக்கப்பட்டு பத்தாம்பசலித்தனமானது என்று ஒதுக்கப்பட்டு அதுவே,

"கார்லிக் பெர்ல்ஸ்" என்ற ஆங்கில பெயரில் உறை மாத்திர என்ற மருந்து வடிவம் பெற்ற பிறகு நவீன கண்டுபிடிப்பாக ஏற்கப்படுகிறது.

நம் பாரம்பரிய அறிவை நம்மிடமே திருடி, நம்மிடமே எப்படி விற்கிறார்கள்.

தமிழ்ச் சமூகம் அறிவுச் சமூகம் தான் என்று உணர வரலாற்று அறிவு முகாமையானது.அதற்கு தேவை நம் முன்னோர்களின் வாழ்வை தேடி அறிவது.
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்......!


நன்றி : கி.வெங்கட்ராமன் அய்யா, தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். 

நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2009 இல் 50 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.


தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...!!!

1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும்

2) அதை இரண்டால் பெருக்கவும்..

3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்

4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்

6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc)

இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!!!

ஜாகுவாரின் மவுசுக்கு இப்போது செம அடி!


குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் பண்ணிய ரவுசு நடவடிக்கையால், ஜாகுவாரின் மவுசுக்கு இப்போது செம அடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராகுல் தக்கார், வெள்ளை நிற ஜாகுவார் XF காரை வாங்கினார். கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் விலை கொண்ட இந்த காரில், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம்.

கார் வாங்கிய சில நாட்களிலேயே பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன. ‘‘ஹெட் லைட் எரியவில்லை; பம்பர் ஆடுகிறது; இன்ஜினில் சத்தம் வருகிறது!’’ என்று ஏகப்பட்ட பிரச்னைகளுடன் ஜாகுவார் சர்வீஸ் சென்டரை அணுகினார் ராகுல் தக்கார். ஆனால், பிரச்னைகள் எதுவும் சரி செய்யப்படாமல், சர்வீஸ் சென்டரில் அப்படியே திருப்பித் தந்ததாக உணர்ந்த தக்கார், ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

தனது ஜாகுவார் காரின் மேல் வைக்கோல்களை அடுக்கி, கழுதைகளை காரில் கட்டி, பொதி இழுத்துச் செல்வதுபோலசர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல், காரில், ‘இது ஜாகுவாரா, கழுதையா? ஜாகுவாருக்கு இந்தக் கழுதைகளே மேல்!’ என்கிற ரீதியில் அடங்கிய வாசகங்களை எழுதிவைத்து, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சென்றார்.

‘‘நாங்கள் உலக அளவில் சிறந்த சேவையை அளித்து வருகிறோம். விரைவில் உங்கள் பிரச்னையைச் சரி செய்து தருகிறோம்!’’ என்று ஜாகுவார் டீலரின் உயரதிகாரி வாக்குக் கொடுத்த பிறகே, அங்கிருந்து திரும்பியிருக்கிறார் ராகுல் தக்கார்.

பிரச்னை தீர்ந்ததா என்பது, ராகுலின் அடுத்த நடவடிக்கையின்போதுதான் தெரியும்

CAPTCHA Text என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் CAPTCHA Text என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?
.
இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. CAPTCHA என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.
.
ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை.
.
இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
.
உங்களுக்குக் காட்டப்படும் CAPTCHA TEXT சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய CAPTCHA TEXT சோதனை தரப்படும்....


CAPTCHA Text

வட கிழக்கு அனல் மின் நிலையங்களுக்கு கங்கை வழியாக நிலக்கரி


வட கிழக்குப் பிராந்தியத் தில் அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரி கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது.

இந்திய நீர்நிலைகளில் 15,544 கி.மீட்டர் நீளமுடைய வழிகள் போக்குவரத்துக்கு ஏற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் தற்போது 5,700 கி.மீட்டரில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.

அதன்படி வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் அலகாபாத் முதல் ஹால்டா வரை அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரியை கொண்டு செல்ல நீர்வழிப் போக்கு வரத்து ஆணையம் புதிய திட்டத்தை தயாரித்துள்ளது.

அலகாபாத் முதல் ஹால்டா வரையில் தற்போது 11 அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இன்னும் 6 ஆண்டுகளில் மேலும் 10 அனல் மின் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. அனைத்து அனல் மின் நிலையங்களும் கங்கை நீர் வழித்தடம் மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப் படும்

அன்பு மகனுக்கு.. அப்பா எழுதுவது..!!


வசதியாக தான் இருக்கிறது மகனே..
நீ கொண்டு வந்து சேர்த்த.. முதியோர் இல்லம்..!!


பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு சலனமின்றி.. நீ வெளியேறிய போது..
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு.. விட்டு செல்லும் போது.. என் முதுகுக்கு பின்னால் நீ கதறக்.. கதற அழும்போது
என் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது..!!

தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் கூட..
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி.. எதுவென்று ஓடி அலைந்ததை..
ஒப்பீடு செய்கிறேன்..!!

இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க.. நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான.. மாதத் தொகையை மறக்காமல்.. அனுப்பி வைப்பதற்காக..
மனம் மகிழ்ச்சி அடைகிறது..!!

நீ விடுதியில் தங்கி படித்த காலத்தில்.. உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்..
உன் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததின் எதிர் வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்..!!

இளம் வயதில்.. நீ சிறுகச்.. சிறுக சேமித்த அனுபவத்தை..
என் முதுமை பருவத்தில்.. மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்...

ஆயினும் உனக்கும்.. எனக்கும் ஒரு சிறு வேறுபாடு...

நான் கற்றுக் கொடுத்தேன்.. உனக்கு வாழ்க்கை இதுவென்று..

நீ கற்றுக் கொடுக்கிறாய்.. எனக்கு உறவுகள் இதுவென்று..!!

இந்திய இளைஞருக்கு 'குளோபல் சிட்டிசன்' விருது

கிராமங்களில் குறைந்த செலவில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்தமைக்காக இந்திய இளைஞர் அனூப் ஜெயினுக்கு `குளோபல் சிட்டிசன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 60 லட்சம்) ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது. 
இவர் 2011ம் ஆண்டு பிஹாரில் `ஹியூமேன்யூர் பவர்' எனும் அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் இந்தியக் கிராமங்களில் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரத் தொடங்கினார். கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி குளோபல் சிட்டிசன் விழாவின்போது 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்துவது தனது இலக்கு என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனது அமைப்பு மூலம் சுமார் 17,000 பயனாளர்களுக்குக் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தந்துள்ளார் அனூப் ஜெயின். குடியுரிமை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கண்டுபிடிப்பின் பயன் மற்றும் அக்கண்டுபிடிப்பின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்து இறுதியில் அனூப் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமானதொரு போதைப்பழக்கம் பரவிவருகிறது.


ஃபெவி க்விக் போன்ற Instant Stickகளை இப்போது போதைப் பொருளாகப் பயன்படுத்துகிற பழக்கம் அதிகமாகியுள்ளது.


ஐந்து ரூபாய்க்கு அதை வாங்கி,       ************************************************************************************************************************************************************************************************************************************************.

அப்படிச்செய்தால், அந்த பேஸ்ட்டிலுள்ள வேதிப்பொருளானது காற்றுடன் கலந்து நெடியேறச்செய்து அது போதையுணர்வைத்தருகிறதாம்.

பெரும்பாலும் டீனேஜ்பருவத்தினரே இதற்கு பலியாகத்தொடங்கியுள்ளனராம்.
சில வருடங்களுக்கு முன், Correction Penஇல் பயன்படுத்தப்படுகிற Thinnerஐ இதற்குப்பயன்படுத்தினார்கள்.

அரசாங்கம் மெதுவாகவிழித்து அந்த Whitener மற்றும் Thinnerஐ ஒன்றாக்கி பேனாவடிவில் கொண்டுவந்தது.
இப்போது இந்தப்பழக்கம் மாணாக்கர்களிடையே புழக்கத்திலுள்ளது.

விலைகுறைவென்பதாலும், ஒரேயொரு முறை இழுத்துப்பார்க்கலாமென்ற தவறானவெண்ணத்தாலும் இதற்கு அடிமையாகத்தொடங்கியுள்ளது இன்றைய இளையசமுதாயம்.

ஊடங்களுக்கு இதெல்லாம் எப்போது தெரிந்து, அந்தநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து
பேரம் படியாமற்போய் அதன்பிறகு இதுபற்றி கட்டுரையெழுதி... மக்களுக்கு விழிப்புணர்வுவந்து...?
நடக்கிற காரியமா?

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?


    உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கும் தன்மை புற்றுநோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர்டாக்டர் ராஜா. புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின் தன்மை குறித்து இதோ அவரே விளக்குகிறார்... புற்றுநோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.


    அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது. மரபணு, பரம்பரை... என பல அம்சங்கள் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்களாய் இருக்கின்றன. பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப்படுத்த முடியும்.

    ஆனால் நோய் முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது குணப்படுத்தும் சாத்தியம் மிகவும் குறைவு. காரணம் குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை மிகவும் சாதாரணமானது. வயிற்று பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால், டாக்டரின் ஆலோசனை பெற தவறிவிடுகிறார்கள். காலம் கடந்த பிறகு புற்றுநோய் கண்டறிந்தால், அந்த கட்டத்தில் மருந்து மாத்திரையில் இதனை கட்டுப்படுத்த முடியாது.

குறட்டையை தடுப்பதற்கான வழிமுறையும்

   நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

   சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம். குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும்.

   குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு. அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி

    பன்றியில், கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

    இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

   மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

   இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன

   மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.

   உலகளவில் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது.

   எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும் புழு பலநேரங்களில் அழிக்கப்படுவதில்லை.

   அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.

குழந்தை வளர்க்க பெற்றோர்க்கு பயன் உள்ள தகவல்


1. குழந்தை அனைத்தையும் ஆராய்ந்து, புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கும். இதனால் சில நேரம் குழந்தைக்கோ, மற்றவர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எதையும் எப்படி மென்மையாகத் தொடுவது என்பதைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.


2. எதை வைத்து விளையாடலாம் எனத் தானே தேர்வு செய்து, அந்தப் பொருளை எடுத்துக் குழந்தை விளையாடும் பருவம் இது.

3. தன் கையிலிருக்கும் பொருட்களைத் தூக்கி போட்டு, தூர எறிந்து விளையாடுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் குழந்தை யூகிக்கத் தொடங்கும். பந்து போன்ற திரும்ப வராத பொருட்களையும் தூக்கி போட்டுப் பார்க்கும்.

4. சுய உணர்வு: நீங்கள் குழந்தையிடம் அன்பு செலுத்துவதன் மூலம், குழந்தையும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்.

5. உடல்: இப்போது குழந்தை தானாகவே எழுந்து நின்று, நடக்க முயற்சிக்கும். ஆனால் உங்கள் கண்காணிப்பு அத்தியாவசியம். இல்லையென்றால், காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

6. உறவுகள்: குழந்தையை மற்றவர் கவனிப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே செல்லும்போது, ஆரம்ப நாட்களில் குழந்தை பெரிதும் ஏமாற்றம் அடையும். இந்த நிலையில் குழந்தையை ஏமாற்றிவிட்டு வெளியே செல்வதைவிட, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் திரும்ப வந்துவிடுவேன் என்பதை விளக்கிவிட்டுச் செல்லுங்கள்.

7. குழந்தைக்கு அது புரியாது என்று நினைக்காமல், இதைச் செய்ய வேண்டும். காலப்போக்கில் நீங்கள் திரும்பி வந்துவிடுவீர்கள் என்பதை குழந்தை நம்பத் தொடங்கும்.

8. புரிதல்: குழந்தை, உங்களை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்வதை எல்லாம் செய்து பார்க்கும். அப்படித்தான் குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும்.

9. கருத்துப் பரிமாற்றம்: நீங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களைக் குழந்தை தெளிவாகப் புரிந்துகொள்ளும். வார்த்தைகளைச் சொல்லிய பிறகு, அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைச் செய்துகாட்டி விளக்கவும் செய்யலாம்.

அரசு வேலைக்கான விண்ணப்பங்களில் இனி விண்ணப்பதாரர்களே சான்றொப்பம் இடலாம்


தமிழக அரசு அறிவிப்பு:

அரசுப் பணி மற்றும் கல்விக்கான விண்ணப்பங்களில் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

ஒவ்வொரு தடவை சான்றொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டும். இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை தருகிறது. அதிலும், ஒரு சில அதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திட மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில் விண்ணப்பிக்கும் நபரே தனது விண்ணப்பத்தில் சான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான உத்தரவை அரசின் அனைத்து துறைகளுக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளளது. கடைசி கட்ட சரிபார்ப்பு பணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு இளம் தலைமுறையினருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான கனடா தூதர் - நாதிர் படேல் நியமனம்




இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதான நாதிர் படேல் (44) நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, கனடா - இந்தியா நாடுகளிடையேயான உறவை அவர் மேலும் பலப்படுத்துவார். என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறை கூட்டாக அறிக்கை ளெவியிட்டுள்ளது.

குஜராத்தின் கலாசார தலைநகர் - வதோதராவை அறிவிக்க முடிவு

குஜராத்தின் கலாசார தலைநகர் - வதோதராவை அறிவிக்க முடிவு :-
சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், குஜராத் அரசு, அங்குள்ள வதோதரா நகரை, மாநிலத்தின் கலாசார தலைநகராக மாற்ற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான அனந்திபென் படேல் கூறியதாவது: காந்திநகர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 2003ல், பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதற்கு பலன் கிடைத்தது.

இதையடுத்து, சுற்றுலா தலங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் அதிகம் உள்ள வதோதராவில், சுற்றுலாவை ஊக்கப்பபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வதோதராவை, மாநிலத்தின் கலாசார தலைநகராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


2014 நோபல் பரிசு


நோபல் பரிசு - 2014

மருத்துவம் / உடற்கூறியல் :-
'மூளையின் வழிகாட்டு அமைப்பை உருவாக்கும் உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக'; அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ’கீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கும்

இயற்பியல் :-
'ஆற்றல் திறன் படைத்த வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளி-உமிழ்வு டயோடுகளை கண்டுபிடித்ததற்காக'; ஜப்பான் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க வாழ் ஜப்பானிய விஞ்ஞானி ஷுஜி நகமுரா ஆகியோருக்கும்
வேதியியல் :-
'உயர்தெளிவு ஒளி நுண்ணோக்கி உருவாக்கியதற்காக'; அமெரிக்க விஞ்ஞானிகள் எரிக் பெட்ஸிக், வில்லியம் மோர்னர் மற்றும் ஜெர்மன் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹெல் ஆகியோருக்கும்
இலக்கியம் :-
'நினைவின் கலையைக் கொண்டு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள இயலாத மானுட சூழ்நிலைகளை சித்திரப்படுத்தியதற்காகவும், பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்தக் காலக்கட்டத்தின் வாழ்வுலகத்தை படைப்புப்பூர்வமாக வெளிப்படுத்தியதற்காகவும்'; பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ அவர்களுக்கும்
அமைதிக்கான நோபல் பரிசு :-
'சிறார் மற்றும் இளைஞர் பாதுகாப்புக்கும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் பாடுபட்டதற்காக'; இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கும் நோபல் பரிசினை வழங்குவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.