குஜராத்தின் கலாசார தலைநகர் - வதோதராவை அறிவிக்க முடிவு
குஜராத்தின் கலாசார தலைநகர் - வதோதராவை அறிவிக்க முடிவு :-
சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், குஜராத் அரசு, அங்குள்ள வதோதரா நகரை, மாநிலத்தின் கலாசார தலைநகராக மாற்ற முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான அனந்திபென் படேல் கூறியதாவது: காந்திநகர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 2003ல், பல முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதற்கு பலன் கிடைத்தது.
இதையடுத்து, சுற்றுலா தலங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் அதிகம் உள்ள வதோதராவில், சுற்றுலாவை ஊக்கப்பபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வதோதராவை, மாநிலத்தின் கலாசார தலைநகராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.