Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!


அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். 

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. 

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. 

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லை
யே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. 

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது ....

செல்வன் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான் ....  வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான் ....

ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள். வந்தவள் செல்வனும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள் ....

அம்மா கேட்டாள் "யாரு இது? செல்வன் சொன்னான் "என் ரூம்மேட்மா " அம்மா "அப்படீன்னா? செல்வன் "ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம் .... அவ தனி பெட்ரூம் நான் தனி பெட்ரூம் " அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள் , இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் "உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை, ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?

 செல்வன் சொன்னான் "தெரியலை ,எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் ", செல்வன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான் அன்புள்ள அம்மா நான் நீங்கள் இங்கே இருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை எடுக்கலைன்னும் சொல்லலை, ஆனா ஒண்ணு மட்டும் உண்மை, என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது ....
அதை செல்வன் பிரித்து படித்தான் ....

அன்புள்ள மகனுக்கு நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு படுக்கிறேன்னு சொல்லலை படுக்கலைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு பிடிச்சு இருப்பா .... 

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை!

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?
வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?
தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

புகை பிடிக்கக் கூடாது. ஏன்?
உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?
சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

குளிக்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

உடனே நடக்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

மௌத்(மரணம்)

ஒருநாள் வரும்-அன்று
நீ குளிக்கமாட்டாய்...

உன்னை குளிப்பாட்டுவார்கள்...

நீ உடை அணியமாட்டாய்
உனக்கு அணுவிக்கபடும்.

நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய்
உன்னை பள்ளிக்குகொண்டு
செல்வார்கள்...

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும் !

நீ படைத்தவனிடம்ஒன்றும்
கேட்கமாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள்
கேட்பார்கள் !

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும்
சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும்
-நீ தயாராக இரு...
-மௌத்(மரணம்)

நாம் தினமும் பயன் படுத்தும் உப்பை பற்றி தகவல் தான் இந்த பதிப்பு ..

உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் . உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம் ...

உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு... உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது

இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள் இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..

ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .

சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

முழுமை பெற்ற காதல் முதுமை காதல்தான்



முடி நரைத்து விட்டது.

தோல் சுருங்கி விட்டது.

பார்வை குறைந்து விட்டது.

நடை தளர்ந்து விட்டது.

எது வேண்டுமானாலும் மாறலாம்

உன் மீதுள்ள காதலை தவிர....

கவர்ச்சியில் வரும் காதல் எல்லாம்

காலப்போக்கில் ஓடி விடும்.

முழுமை பெற்ற காதல்தான் முதுமை 

வரை ஓடிவரும்....

கற்பனை கதை படித்த மனசு ரிலாக்ஸ் - ஆக இருக்கும்

ந ம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்.... "சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க, "நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு. "அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்" 

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார். "இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?" "ஒருவரிடம் மட்டும்…" "என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?" "$1012347.64 க்கு  "ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?" 

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். 

அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்" "என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?" மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார், "அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்" 

அனைத்தும் கற்பனை. இப்படி எல்லாம் கதை படித்த தான் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும்

கருவைக் கலைக்க பெண், மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி!!!!!!!!!!

     ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று... டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.    என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை.    அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்தகுழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள். டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? என்றார். அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.  

      டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.  தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.  டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். 

           இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார். உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார். அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.  ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ?   பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார். அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்....

சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்.

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன்

அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை

தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்

தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா

உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும், பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா

சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி

நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா

இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்.

-ஆதிரா

ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல...

1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.

2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.

3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.

4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.

5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.

6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.

7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.

8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.

9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது

10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.

11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.

12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாமா கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.

-ஆதிரா.

பரஸ்பரம் மரியாதை நன்மை பயக்கும்


சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....
அவரிடம், "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.


"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...

உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றார்...
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.....

அன்பு மகனுக்கு.. அப்பா எழுதுவது..!!


வசதியாக தான் இருக்கிறது மகனே..
நீ கொண்டு வந்து சேர்த்த.. முதியோர் இல்லம்..!!


பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு சலனமின்றி.. நீ வெளியேறிய போது..
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு.. விட்டு செல்லும் போது.. என் முதுகுக்கு பின்னால் நீ கதறக்.. கதற அழும்போது
என் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது..!!

தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில் கூட..
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி.. எதுவென்று ஓடி அலைந்ததை..
ஒப்பீடு செய்கிறேன்..!!

இது வரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க.. நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான.. மாதத் தொகையை மறக்காமல்.. அனுப்பி வைப்பதற்காக..
மனம் மகிழ்ச்சி அடைகிறது..!!

நீ விடுதியில் தங்கி படித்த காலத்தில்.. உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்..
உன் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததின் எதிர் வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்..!!

இளம் வயதில்.. நீ சிறுகச்.. சிறுக சேமித்த அனுபவத்தை..
என் முதுமை பருவத்தில்.. மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்...

ஆயினும் உனக்கும்.. எனக்கும் ஒரு சிறு வேறுபாடு...

நான் கற்றுக் கொடுத்தேன்.. உனக்கு வாழ்க்கை இதுவென்று..

நீ கற்றுக் கொடுக்கிறாய்.. எனக்கு உறவுகள் இதுவென்று..!!

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.


வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

நான் நாட்டு கட்டையா இல்லை நான் ஒரு ஊமை



ஒரு பொண்ணு பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தது. அதே பஸ் ஸ்டாப்பில் 2 இளைஞர்களும் நின்றார்கள்.இந்த இரண்டு பேரும் அந்த பெண்ணைவிட்டு கொஞ்சம் தள்ளியே நின்றார்கள்.சிறிது நேரம் கழித்து அந்த பஸ் ஸ்டாப்புக்கு வேறொரு பையன் வந்தான்.அவன் அந்த பெண்ணின் அருகே நின்றான்.இவள் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் காதில் "செம கட்டை....நாட்டு கட்டை" என்று சப்தம் கேட்டது.இதை கேட்ட அந்த பெண் கோபத்தில் தன் அருகே நின்ற பையனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்துவிட்டு ''நான் உனக்கு நாட்டு கட்டையா என்று கேட்டாள்''.
பிறகு அவனை அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டினாள்.எதுவுமே சொல்லாத அந்த பையன்,சிறு புண்ணகையுடன் ஒரு பேப்பரில் எதையோ எழுதி,அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அதை கோபத்துடன் வாங்கி படித்தாள் அந்த பெண்.அதை படித்த பின் ஒரு சில நிமிடத்தில் அழுதுவிட்டாள்.

அந்த பேப்பரில்,,,
"அன்பு தங்கையே,உனது அண்ணனாகிய எனக்கு,பிறவியிலிருந்தே பேச்சு வராது.
நான் ஒரு ஊமை மா"
என்று எழுதியிருந்தது......
‪நீதி‬
வேற ஒருவன் செய்த தவறுக்கு, தங்கை என்று நினைத்த வாய் பேசாத பையனுக்கு அடியா????

அப்பாவிற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் ஆயிரம்  முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..
நன்றி:- John Mark

கவியரசு கண்ணதாசன் வரிகள்

தாய் பசித்திருக்கும்போது
தாரத்திற்கு சோறூட்டாதே;
நீ பசித்திருக்கும்போது
உன் பிள்ளைகள்
அதே வேலையைச்செய்துகொண்டிருப்பார்கள்.


உடம்பை ஒழுங்காய் வைத்திருப்பவனை
மரணம் நெருங்குகிறது;
உடம்பை கெடுத்துக்கொண்டவன்
மரணத்தை நெருங்குகிறான்.

இன்ன ஓவியத்தை வரையப்போகிறோமென்று
முடிவுகட்டிக்கொண்டு தூரிகையை
எடுப்பவன்பெயர் ஓவியன்.
'மையை ஊற்றுவோம்-அது
எப்படிவேண்டுமானாலும் விழட்டும்;
அதுவே ஓவியம்'
என்று முடிவுகட்டுவோன்பெயர் அரசியல்வாதி.

ஆணவமும் அழிவும் இரட்டைக்குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.

வாழ்க்கை தத்துவம்


குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் ஒரு இளைஞன் தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்துகொண்டு இருக்கும் வேளையில்,“அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.


வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை. “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான்

இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை

படித்ததில் பிடித்தது