மெக்கானிக்கும் மருத்துவரும்



ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து

மெக்கானிக் கார் எஞ்சினைக் காண்பித்து நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம்.

அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.
இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல்கார்இயங்கிக் கொண்டிருக்கும்போது அது முடியுமா என்றார்.