ஒரு தாயின் பதட்டம் ... ?


என் பெண் குழந்தை
தவழும்போது கீழே விழுந்தாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
நடக்கும் போது கீழே விழுந்தாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
பள்ளித்தேர்வில் பல முறை பெயிலானாள் நான்
பதட்டப்படவில்லை
எழுந்து விட்டாள்

என் பெண் குழந்தை
இப்போது கல்லூரிக்குச்செல்கிறாள்
காதலில் விழுவாளோ என பதட்டப்படுகிறேன்
விழுந்தாலும் எழுவாளோ என பதட்டப்படுகிறேன்
விழுந்து எழுந்தாலும் வாழ்க்கையில்
பெயிலாகி விடுவாளோ என பதட்டப்படுகிறேன்

ஏனென்றால் அவள் என் மகள்

ந.கல்யாண சுந்தரம் , ஓசூர்.